இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.
இந்த பெரும் அண்டவெளியில் பெருமை கொள்ளக்கூடிய விசயம் என்னவெனில் அளப்பரிய அறிவு கொண்டு இந்த மானுடம் இருப்பதுதான், அதே வேளையில் சிறுமை கொள்ளக்கூடிய விசயம் என்னவெனில் மானுடத்தின் அறிவு பேரன்பு அற்று வெறுப்பில் வெந்து போவதுதான்.
இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.